காலை 9:25 மணிக்கும், பிற்ப்பகல் 1:55 மணிக்கும் முதல் மணி அடித்தவுடன் மாணவர்கள் வகுப்பு அறைக்குள் சென்று அவரவர் இடங்களில் அமர்ந்திருக்க வேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியர் வந்தவுடன் மாணவர்கள் எழுந்து அமரச் சொல்லும் வரை நிற்க வேண்டும் அல்லது அவர் அமரும் வரை நிற்க வேண்டும்.
ஒவ்வொரு வேளையும் வகுப்பு தொடங்கும் போதும், முடியும் போதும், யாவரும் நின்று ஆசிரியர்க்கு மரியாதை செலுத்தல் வேண்டும்.
ஆசிரியரின் அனுமதியின்றி வகுப்பறைக்கு வெளியே செல்லக்கூடாது. வகுப்புத் தொடங்கி இரண்டு பாடவேளை முடிந்த பின்பு மாணவர்களுக்கு இடைவேளை கொடுக்கப்படும்.
திங்கள்கிழமை நடக்கும் பள்ளிப் பேரவைக்கு மாணவர்கள் தங்கள் வகுப்புத் தலைவருடன் அணிவகுத்து தம் இடத்தில் அமைதியாக நிற்க வேண்டும். பேரவை முடிந்த பின்பு அமைதியாக வகுப்புக்கு செல்ல வேண்டும்.
காலதாமதமாக வரும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் அனுமதிச் சீட்டு பெற்ற வந்தாலொழிய வகுப்பில் அனுமதிக்கபடமாட்டர்கள்.
மாணவர்கள் வகுப்பு மாறும் போதும் மாடிப்படியில் ஏறி இறங்கும் போதும் அமைதியுடன் சிறிதும் ஒலியின்றி இடப்பக்கமாக அணி வகுத்து செல்ல வேண்டும்.
மாணவர்கள் வகுப்பறையில் மதிய உணவு அருந்தக் கூடாது. மதிய வேளையில் பந்து எறிதல், முதலிய விளையாட்டுக்கள் தவிர்க்க வேண்டும்.
தரையில் உமிழ்தல், மை தெளித்தல், தாள்களைக் கண்ட இடங்களில் போடுதல், சுவற்றில் எழுதுதல் ஆகிய தீய பழக்கங்கள் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள், தத்தம் பொருட்களைக் காப்பதுடன் கண்டெடுத்த பொருட்களைத் தலைமை ஆசிரியரிடும் ஒப்படைக்க வேண்டும்.
மிதிவண்டிகளை குறிப்பிட இடத்திலேயே நிறுத்தி பூட்டி வைக்க வேண்டும்.
பள்ளி அலுவலர்களையோ, ஆசிரியர்களையோ சந்திக்கும் பொது மரியாதை செய்தல் நன்மாணவனின் குணமாகும்.
மாணவர்கள் வெளியிடங்களில் பழகும்போது பள்ளியின் மதிப்பை காக்க வேண்டும். பள்ளி முடிந்த பின் கற்ற பாடங்களைத் தினந்தொரும் உள்ளத்தில் பதியுமாறு படித்து விடுதல் நன்று.
பள்ளியில் நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் முறை தவறி நடந்தால் பள்ளியிலிரிந்து நீக்கபடுவர்கள்.
மாணவர்கள் ஆய்வுக் கூடத்திலிரிந்து வாங்கி வரும் பொருட்களை அல்லது உபயோகிக்கும் கருவிகளை மிகவும் கவனத்துடன் உபயோகித்தல் வேண்டும். தங்களது கவனமின்மையலும் பொறுப்பற்ற தன்மையாலும் பொருட்களுக்குச் சேதம் விளைவித்தல், அதற்குரிய தொகையை செலுத்திட வேண்டும்.
பள்ளி பொருட்களுக்கு கேடு பயத்தல், பள்ளி சுற்றுப் புறத்தை அசுத்தபடுத்தல் முதலியன இழிவான செயல்களாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கபடுவார்கள்
Get In Touch
Muslim
Educational Committee, Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005