Muslim Educational Committee
Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005
Call Us
0462 – 2352708           
Email Us
info@muslimschool.in

தமிழகத்தில் அதிக அளவில் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டுள்ள திருநகர் மேலப்பாளையம் ஆகும்.திருநெல்வேலிக்கும் பாளையம்கோட்டைக்கும் மத்தியில் இந்நகர் அமைந்திருந்தாலும் கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதை கருத்தில் கொண்டு 1941-ம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டது.

“முஸ்லிம் கல்வி கமிட்டி” என்ற பெயரிலான கூட்டு அமைப்பின் சார்பில் இப்பள்ளி மறைந்த பிரபல வழக்கறிஞர் அல்ஹாஜ் K.M.S.ஹமீது சாஹிப் B.A,B.L, அவர்கள் நிறுவினார்.

நமதூர் மூலன் அஹ்மது பிள்ளை தெருவில் சிறிய வாடகை கட்டிடத்தில் ஆரம்பப் பள்ளியாக மலர்ந்து, காலஞ்சென்ற பின் அல்ஹாஜ் முகம்மது உதுமான் சாஹிப் அவர்களும், ஜனாப் மீரான் முஹைதீன் சாஹிப் அவர்களும் முன்வந்து நன்கொடையாக வழங்கிய சொந்த நிலத்தில், தாராள மனம் படைத்த நன்மக்களின் பண உதவியால் இப்பள்ளி உருவாகி நிறைந்த நன்மணத்தை இன்று பரப்பிகொண்டிருக்கிறது.

நிறுவனர் அவர்களைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜனாப் அப்துல் ரஹ்மான் சாஹிப் ,அல்ஹாஜ் கொ.அ.மு. முஹமது இப்ராகிம் சாஹிப், அல்ஹாஜ் சம்சுதீன் சாஹிப் மற்றும் அல்ஹாஜ். ஹயாத் ஆகியோர் இப்பள்ளியின் தாளாளர்களாக பணியாற்றிய பெருமக்கள் ஆவார்கள்.

நமதூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி இப்பள்ளியின் ஆறாவது தாளாளராக பொருபேற்றார் .
அதன்பின் கல்வி கமிட்டியின் பெருமுயற்சியில் இப்பள்ளி நாளொருமேனியும்-பொழுதொரு வண்ணமாக, பல புதிய அத்தியாங்களை காண ஆரம்பித்தது.

மழலையர் கல்விக்கென 1993-ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று உருவாக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றது.
1993-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வகையில் திரட்டப்பட்ட நன்கொடை மூலம் புதிய பல வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 1998-ஆம் ஆண்டு பள்ளியின் தென்பகுதியில் அமைந்த கீழ்தள ஆறு வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அரை, பள்ளி அலுவலகம் ஆகியன புது பொலிவுடன் புதிதாக கட்டபட்டதொடு மேல் மாடியில் கூடுதலாக ஆறு வகுப்பறைகளும் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.இந்த புதிய வகுப்பறைகள் கூட்ட அரங்கமாகவும் பயன்படுத்தும் வகையில் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.பள்ளியின் முகப்பு வாயில் புதிதாக அமைக்கப்பட்டு புது அழகுடன் காட்சி தருகின்றது.

சீதக்காதி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் சென்னை ஐக்கிய பொருளாதாரப் பேரவை நிறுவனர் கொடைவள்ளல் அல்ஹாக்.B.S.அப்துல் ரஹ்மான் சாகிப் அவர்கள், நமது பள்ளியின் அடிப்படை வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆவார்ர்.

கலீபா அபூபக்கர் சித்தீக் பெயரில் அமைந்துள்ள ஆறு வகுப்பறைகள், யூசுப் சுலைகா புஹாரி ஆலிம் வகுப்பறைகள் முதலியன அல்ஹாக்.B.S.A. அவர்களின் “சீதக்காதி அறக்கட்டளை” சார்பில் கட்டப்பட்டவை. மேலும் பள்ளியின் உட்புறம் சுவர் கட்டித்தந்ததோடு, மாணவர்களுக்கு ஆறு கணிப்பொறியினையும் தந்துள்ளார்கள். இன்னும் நம் பள்ளிக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அல்லாஹ் அன்னருக்கு நீடித்த ஆயுளையும், நிலைத்த புகழினையும் தந்தருள்வானாக! ஆமீன்!!

1999-2000 மற்றும் 2000-2001 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருமிகு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிநிதியிலிருந்து ரூபாய் 21 லெட்சம் செலவில் மாடியுடம் கூடிய ஐந்து வகுப்பறைகளும், பாளையம்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜனாப்.கோதர் மைதீன் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 4.4 லெட்சம் செலவில் இரு வகுப்பறைகளும் நிர்வாகத்தின் சார்பில் இரு வகுப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மாறிவரும் நவீன கணிப்பொறி உகத்தில் நம் பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1999-2000 கல்வியாண்டு முதல் மேல்நிலை வகுப்பில் கூடுதலாக கணிப்பொறி கல்வி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சியை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும், +2 பொதுத்தேர்வில் 99 சதவிதமும், 10த் பொதுத்தேர்வில் 90 சதவிதத்திற்கும் மேலாக வெற்றி பெற்று வருவது குறிப்பிடதக்கது.மேல்நிலைப்பள்ளியில் 2450 மாணவ-மாணவிகளும்,கோல்டன் ஜூப்ளி மெட்ரிகுலேசன் பள்ளியில் 2000 மாணவ-மாணவிகளும் சிறப்பான கல்வியை பெற்று வருகின்றனர்.

2000-2001 கல்வியாண்டு முதல் நமது பள்ளி மாணவிகளை அவர்கள் இல்லத்திலிருந்தே அழைத்து வர நிர்வாகத்தின் சார்பில் புதிய வேன்கள் வாங்கப்பட்டுள்ளன.
நமது பள்ளி வளாகத்தினுள் மாணவர்களுக்காக ‘மஸ்ஜித்’ ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற கனவை நினைவாக்க சென்னை அல்-ஹரமைன் அறக்கட்டளை உதவியுடன் அழகிய மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்டது.

2008-2009 கல்வியாண்டில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. தனுஷ்கோடி ஆதித்தன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், நிர்வாகத்தின் சார்பிலும் ரூபாய் 45 லெட்சம் செலவில் புதியதாக எட்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லாஹ் !
2010-2011 ஆம் கல்வியாண்டில் ஆங்கிலோ-இந்தியன் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்கார் நிக்லி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிரிந்து ரூபாய் பத்து லேட்சும் செலவில் இரண்டு வகுப்புரைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பள்ளித் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க, வாசன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய வகுப்பறைக் கட்ட ரூபாய் 10 லெட்சம் வழங்கி உள்ளார்கள்.

2013-14 ஆம் கல்வி ஆண்டில் நமது முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.ராமசுப்பு அவர்கள் பாராளுமன்ற தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லெட்சம் வழங்கியுள்ளார்கள்.

2014-15 ஆம் கல்வியாண்டில் பாளையம்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜனப் மைதீன் கான் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பட்டு நிதியிலிருந்து முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட நன்குடிநீர் வசதி ரூபாய் 5 லெட்சம் ஏற்படுத்தபட்டுள்ளது.நவீன கழிப்பிடமும் கட்டுவதற்கு ரூபாய் 10 லெட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

2015-2016 ஆம் கல்வி யாண்டில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்  திருமிகு S. முத்துகருப்பன் M.A.,B.L.,M.P. அவர்கள் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிட ரூபாய் பத்து லட்சம் ஓதுக்கிடு  செய்துள்ளார்கள் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம் 

மேலும் மாணவர்களுக்க்த் தேவைப்படும் அனைத்து வசதிக்களையும் முறையாக வழங்கிட, பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். எல்லா நிலைகளிலும் உயர்ந்த இடத்தை பெற்று திகழும் உன்னத கல்வி கூடமாக இப்பள்ளித் திகழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிகொள்கிறோம்.

நமது முஸ்லிம்  மேல்நிலைப்பள்ளி மற்றும் கோல்டன் ஜூபிலி மெட்ரிக் பள்ளி ஆகிய கல்வி நிறுவங்களின் தாளாளராக கடந்த் 25 ஆண்டுகளாக (1993-2018) சிறப்பாக செயற்பப்ட்டு இரு பள்ளிகளின் வள்ர்ச்சிக்கு அயாராது உழைத்த மேலப்பாளையம் நகர் மன்ற மேனாள் தலைவர் ஹாஜி. M.A.S  முகம்மது அபுபக்கர் சாஹிப் அவர்கள் கடந்த 9-12-2018 அன்று காலமானார்கள். அதனை தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம்  கல்விக் கமிட்டியின் செயலாளராகவும் ,முஸ்லிம்  மேல்நிலைப்பள்ளி  மற்றும் கோல்டன் ஜூபிலி மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் தாளாளராகவும் ஜனாப். L.K.S. முகம்மது மீரா முகைதீன் .B.Com., அவர்களும், தலைவராக ஹாஜி. K.A. அப்துல் காதர் சாஹிப்  B.Sc.(Agri) அவர்களும் ஏகமனாதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

   பவள விழா 

நமது முஸ்லிம்  மேல்நிலைப்பள்ளி  கடந்த 1941 ஆம் ஆண்டு முஸ்லிம்  கல்விக் கமிட்டி என்ற பொது அமைப்பு மூலம் துவங்கப்பட்டது.

இப்பள்ளியின் 78 ஆவது ஆண்டு பவள விழா கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாண்புமிகு. பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருமிகு, K.A . செங்கோட்டையன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். விழாவில் தமிழக ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. V.M இராஜலட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய பிரமுகர்கள். பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

Get In Touch

Muslim Educational Committee, Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005

0462 – 2352708

info@muslimschool.in

MAP

© Muslim Educational Committee. All Rights Reserved. Designed by Peace Soft Techonologies