Achievements
2009 ஜூலை 24ந் தேதி திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற காமராஜ் பிறந்தநாள் விழாவின் போது பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு சிறந்த கல்வியலர்க்கான பெருந்தலைவர் காமராஜ் விருதினை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு G.K வாசன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
விருது பெறுபவர்: அல்ஹாஜ். ஜனாப் M.A.S முகமது அபூபக்கர் சாஹிப் அவர்கள்
இளமை முதலே காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதும், பெருந்தலைவர் காமராஜர் மீதும் அளவற்ற பற்று வைத்திருந்தவர் M.A.S முகம்மது அபூபக்கர். இவர் 28வது வயதில் மேலப்பாளையம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப் பெற்றார்,முதலமைச்சராக இருந்த காமராஜர், நெல்லை பகுதிக்கு வந்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சர் மஜீத் மூலமாக, யுத்த நிதி வழங்கி பெருந்தலைவரின் பாராட்டை பெற்றவர்.
நெல்லை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருமுறையும் நியமனம் செய்யப்பட்டு, சிறப்பாக ஆட்சிப்பணியற்றியவர். மக்கள் தலைவர் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் துவங்கிய பொழுது, துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இருமுறை மேலப்பாளையம் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி,மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர்.
10 ஆண்டு காலமாக கட்டி முடிக்கபடாமல் இருந்த, நகராட்சி அலுவலகத்தை, நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்ற உடனேயே 6 மாதத்தில் கட்டி முடித்தார்.மேலபாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முஸ்லிம் கல்வி கமிட்டி சிறப்பாக செயல்பட செய்தவர்.
முன்னாள் மத்திய அமைச்சர் திரு.தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள், முன்னால் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரிடம் பெற்ற, தொகுதி வளர்ச்சி நிதியுடவிகளின் மூலமாக பள்ளிக்கு பல வகுப்பறைகளைக் கட்டி வசதிகளை பெருக்கியவர்.
கொடைவள்ளலும், தொழிலதிபருமான அல்ஹாஜ்,ஜனாப் அப்துர்ரஹ்மான் சாஹிப் அவர்கள் உதவியோடு, கல்வி வளர்ச்சிப் பணி செய்தவர்.மேலபாளையம் பகுதி மாணவர்களின் ஆங்கில கல்வி தரத்தை உயர்த்த , கோல்டன் ஜூப்ளி பள்ளியை ஆரம்பித்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியவர்.
மேலபாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் எந்தவித சாதி, மத வேருபாடுஇன்றி அனைத்து தரப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்க்கப்பட்டு, சமூக நல்லினக்கனத்திர்க்கு அடித்தளம் அமைத்து தமிழ் நாட்டிலேயே மதனநல்லினகனத்திர்க்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு என்கின்ற நற்பெயரை பெற்று, அனைவரது போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியதக்கியவர் முஹம்மத் அபூபக்கர்.
பொது வாழ்கையில் அனைவருக்கும் முன்மாதிரியாக, கல்வித்துறையில் சாதனையாளராக விளங்கி வருகிற, அல்ஹாஜ் ஜனாப் முஹம்மத் அபூபக்கர் மத நல்லினக்கனத்தில் நம்பிக்கை கொண்ட பெருமகனார் ஆகவும் விளங்கி வருகிறார்.
இத்தகைய நற்பண்பு பெற்று, பொது வாழ்கையில் முன் மாதிரியாக விளங்கி வரும் அல்ஹாஜ் ஜனாப் முஹம்மத் அபூபக்கர் பெருந்தலைவர் காமராஜரின் 107வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ‘காமரஜர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நம்பள்ளித் தாளாளர் அல்ஹாஜ்.முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் பொது வாழ்வில் காலடி எடுத்து வைத்து சமுக சேவையில் 50 ஆண்டுகள் நிறைவானதையொட்டி அன்னார்க்கு பொதுவாழ்வு பொன்விழ என்னும் பெயரில் பாராட்டு விழ ஒன்று, நம் பள்ளி வளாகத்தில், 18-10-2009 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.மைதீன் கான் , நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு.ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ், அல்ஹாஜ் செய்யது அப்டுகதர் என்னும் “சீனா தான வாப்பா” ஆகியோர் உட்பட பல்வேறு அரசியல், மற்றும் சமுதாயத் தலைவர்கள், பாராட்டு விழாவில் பங்கேற்று, நம் பள்ளித் தாளாளர் அவர்களின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.
நம் தாளாளர் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்களின் பொது வாழ்வுப் பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்று வெளியடப்பட்டது.ஹாஜி. சீனா தான அவர்கள் மலரை வெளியிட திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமிகு.சுப்பிரமணியன் அவர்கள் பெற்றுகொண்டார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற, திண்டுக்கல் ஐ.லியோனியின் பட்டிமன்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
“தமிழ்த்தென்றல்” திரு.வி.க.’ விருது பெற்றவரும், தமிழக தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னால் இயக்குனருமான திரு.பெரியன்ன்டவர் தலைமையில், மாநில தீர்ப்பாய நீதிபதி.’நீதியரசர்’ அல்ஹாஜ்.அப்துல் வஹாப் அவர்கள். இவ்விழாவில், நம்பள்ளித் தாளாளருக்கு ‘விருதினை’ வழங்கி, கௌரவித்தார்கள் என்பது ‘சிறப்புக்குரிய’ செய்தி ஆகும்.
எம் பள்ளியின் சாதனை வரலாற்றில் மற்றொரு மைல் கல்லாக எம் பள்ளி மாணவர் சதாம் உசேன் (த/பெ. அப்துல் ரகுமான் ) 2010-11 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், நெல்லை மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றுத் தந்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவர் சதாம் உசேனை பள்ளித் தாளாளர் அல்ஹாஜ். முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்களும், பொருளாளர் ஹாஜி.அப்துல் மஜீத் சாஹிப் அவர்களும், கல்விக்குழு உறுப்பினர்களும்,பள்ளித் தலைமை ஆசிரியர் ஹாஜி.சேக் முஹம்மது அவர்களும் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் பாராட்டி சிறப்பித்துள்ளனர்
Muslim Educational Committee, Recognised by Govt. of Tamil Nadu, Melapalayam, Tirunelveli-627005
0462 – 2352708
info@muslimschool.in
© Muslim Educational Committee. All Rights Reserved. Designed by Peace Soft Techonologies